மானாமதுரை தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வெற்றி

Update: 2021-05-03 09:51 GMT

மானாமதுரை தொகுதியில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் தமிழரசிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் வெற்றி பெற்ற சான்றிதழை வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தமிழரசி 14,091வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சி வேட்பாளராக தமிழரசி, அதிமுக வேட்பாளராக நாகராஜன், அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி சார்பில் மாரியப்பன் கென்னடி மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மற்றும் மக்கள் நீதி மைய கட்சி வேட்பாளர் உள்ளிட்ட சுயேச்சை உட்பட 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  இதற்கான வாக்கு எண்ணிக்கை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில்  நடைபெற்றது. 

இதில் 30சுற்றுகள் நடைபெற்றன. இதில் அதிமுக கட்சி வேட்பாளர் நாகராஜன் 75,273 வாக்குகள் பெற்றார். திமுக  வேட்பாளர் தமிழரசி 89,364 வாக்குகள் பெற்றார். அதிமுக  வேட்பாளர் நாகராஜனைவிட 14,091 வாக்கு வித்தியாசம் பெற்று வெற்றி பெற்றார்.  திமுக  வேட்பாளர் தமிழரசி வெற்றி பெற்றதாக மானாமதுரை சட்டமன்ற தேர்தல் அலுவலர் அறிவித்து சான்றிதழை வழங்கினார்.



Tags:    

Similar News