பல நோய்களைக் குணப்படுத்தும் துாதுவளை உங்களுக்கு தெரியுமா? ... படிச்சு பாருங்க...

toothuvali herbal medicinal purpose நாம் சாப்பிடும் உணவு வகைகளில் தினந்தோறும் காய்கறி மற்றும் கீரைவகைகளை கட்டாயம் சேர்த்துகொள்ள வேண்டும். அதுவும் குழந்தைகளுக்கு அவசியம் சாப்பிட பெற்றோர்கள் பழக்க வேண்டும்.

Update: 2022-10-05 14:14 GMT

துாதுவளைச் செடி   ( பைல் படம்)

toothuvali herbal medicinal purpose



துாதுவளை செடியிலிருந்து தயார் செய்யப்பட்ட பொடி  (பைல் படம்)

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் காய்கறி மற்றும் கீரை வகைகள் அனைத்திலுமே தாதுப்பொருட்கள் அடங்கிய சத்துகள் உள்ளன. ஒவ்வொரு காய்கறி மற்றும் கீரைகளில் சத்துகள் மாறுபடும். அந்த வகையில் காய்கறிகளை வேகவைத்துசாப்பிடுவதால் சத்துகுறைந்து போகும் என்றாலும் எல்லா காய்கறிகளையும் பச்சையாக சாப்பிட முடியாத நிலை உள்ளதே.ஆனால் இக்கால குழந்தைகள் காய்கறிகள், பழவகைகளை ஒதுக்கிவிட்டு  ஃபாஸ்ட்புட் அயிட்டங்களையும் எண்ணெயில் பொறித்த வெரைட்டிகளையும்  விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் இதனால் உடலுக்கு தீங்கே தவிர  எந்தவித சத்துகளும் சேர வாய்ப்பில்லை. எனவே  பெற்றோர்கள்  காய்கறி, கீரைவகைகளை குழந்தைகளுக்கு சாப்பிட பழக்குங்கள்...

துாதுவளையில் அடங்கியுள்ள மருத்துவ குணங்களைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

துாதுவளை வேலிகளில் படர்ந்து வளரும் கொடி வகையாகும். இதன் இலைகளிலும், கொடியிலும் கொக்கி போன்ற முட்கள் நிறைந்திருக்கும். இதன் பூக்கள் கத்தரிப் பூவைப்போன்றும், இதன் பழங்கள் கொத்துக்கொத்தாக சிவப்புநிறத்தில் இருக்கும்.துாதுவளை ஓர் அற்புதமான மருத்துவ மூலிகையாகும். சளி,இருமல், ஆஸ்துமா, பலகீனம், காது, மூக்கு, தலை மற்றும் தோல் சம்பந்தமான நோய்களுக்கும் நரம்பு தளர்ச்சிக்கும் மூளைத் திறனை அதிகரிக்கவும் இது உதவுகிறது.

மூட்டுவலி, கைகால்வலி உடம்புவலி

மேற்கண்ட வியாதிகளினால் கஷ்டப்படுகிறவர்கள் துாதுவளையை துவையல் செய்து சாப்பிட்டு நிவாரணம் பெறலாம். துாதுவளை இலையைப் பறித்துவந்து முள் நீக்கி தண்ணீர் விட்டுசுத்தம்செய்து கொண்டு நீரில்லாமல் உலர்த்திக்கொள்ளவும்.

பின்னர் இதனை மண்சட்டியில் போட்டு நெய்விட்டு வதக்கி எடுத்து தேங்காய், உப்பு, மிளகாய், மிளகு, புளி, பூண்டு, சேர்த்து அம்மியில் வைத்து துவையலாக அரைத்து எடுத்து தாளித்துக்கொள்ளவும். இதனை சுடு சோற்றில் கலந்து சாப்பிடவும். இதுபோன்று செய்து வந்தால் மூட்டுவலி கைகால்களில் வலி, உடம்பு வலி, போன்ற குறைபாடுகள் நீங்கி சுகமளிக்கும்.

சளி தொல்லைக்கு

குழந்தைகளுக்கோ, பெரியவர்களுக்கோ, பல நாட்களாக தீராது. சளித்தொல்லை கொடுத்து வந்தால் கீழ்க்காணும் முறையில் நிவாரணம் பெறலாம். 4துாதுவளைப் பழங்களை  வெள்ளைத்துணியில் வைத்து சாறு பிழிந்து சிறிது தேன் அல்லது பால் கலந்து இரண்டு வேளை என இரண்டு நாட்கள் கொடுக்கவும் சளித்தொல்லை நீங்கும்.ஒரு வயது குழந்தையாக இருந்தால் ஒரு பழம் போதும்.

toothuvali herbal medicinal purpose


toothuvali herbal medicinal purpose

இளமையாக இருக்க

நோய் நொடிகள் இல்லாமல் என்று புத்துணர்வுடன் சந்தோஷத்துடன் வாழ துாதுவளை லேகியம் தயார் செய்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலனைப் பெறலாம். முதலில் இதன் இலைகளைப் பறித்துவந்து இதன் முட்களை நீக்கி நிழலில் உலர்த்தி நன்றாக பொடிசெய்து சலித்து 500கிராம் தயார்செய்து கொள்ளவும்.

அதன் பின்னர் கீழ்காணும் சரக்குகளை 25 கிராம் வீதம் ஒவ்வொன்றையும் தயார் செய்து கொள்ளவும். அதிமதுரம், சுக்கு, ஆடாதொடை, முசுமுசுக்கை, துளசி, சித்தரத்தை, பேரரத்தை இவைகளை இடித்து துாளாக்கி தனித்தனியாக சூரணம் செய்து தனித்தனியாக வைத்துக்கொள்ளவும்.

பின்னர் ஒரு கிலோ கருப்பட்டியை துாள்செய்து பெரிய மட்பாண்டத்தில் போட்டு அதில் பசும்பால் அரை லிட்டர் ஊற்றி அடுப்பிலேற்றிக் காய்ச்சவும். பாகு நன்றாக வந்ததும் இடித்து சூரணமாக்கி வைத்துள்ள துாதுவளையை அதில் கொட்டி நன்றாக கிளறிவிடவும்.

அதன்பின்னர் தனித்தனியாக சூரண சரக்குகளை ஒவ்வொன்றாக அதில் கொட்டிகிளறிக்கொண்டே இருக்கவும். லேகிய பதம் வந்ததும் பட்டை 5 கிராம் ஏல அரிசி 5கிராம், கிராம்பு 5கிராம், ஆகியவற்றை இடித்து துாளாக்கிஇதில் போட்டுநன்றாக கிளறவும். கிளறும் சமயம் தேவையான அளவு நெய், தேன்விட்டுக்கலக்கி லேகிய மணம் வரும்போது அடுப்பிலிருந்து கீழே இறக்கி விடவும். லேகியம் ஆறியதும் சுத்தமான ஜாடியில் பத்திரப்படுத்திக்கொள்ளவும்.

இந்தலேகியத்திலிருந்து தினசரி காலை மாலை இருவேளையும் நெல்லிக்காய் அளவு எடுத்து சாப்பிட்டு சூடாக ஒரு கோப்பை பால் குடிக்கவும். இதுபோன்று தினசரி இந்த லேகியத்தினைச் சாப்பிட்டு வந்தால் தீராத நோய்கள் தீரும். உடல் புத்துணர்வு பெறும். நரம்புகளுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும். நினைவாற்றால் அதிகமாகும். துாதுவளை லேகியம் நோய்கள் வராமல் தடுத்து இளமையுடன் வாழ வைக்கும் ஒரு அற்புதமான லேகியமாகும்.

துாதுவளைப் பூவின் மருத்துவ பயன்கள்

துாதுவளையைப் பற்றி தேரையர் மிக தெளிவாக கீழ்காணும் பாடலில் உணர்த்துகின்றார்.

''துாது பத்திரி யூன்சுவை யாக்கும்பூ

தாதுவைத் தழைப் பித்திடுங் காயது

வாத பித்த கபத்தையு மாற்றும்:வே

றோதும் வல்லிபன் னோவு மொழிக்குமே''

துாதுவளைப் பூ சுக்கிலத் தாதுவை விருத்தி செய்கிறது. விந்து தானாக வெளியேறுதல், விந்துவில் உயிர் அணுக்கள் குறைவு பட்டு மலட்டுத்தன்மை அடைவது போன்ற குறைபாடுகளை நீக்கி நல்ல பலனைக் கொடுக்கும். துாதுவளை சுவாச காசக்ஷயம் போன்ற கொடிய வியாதிகளையும் அகற்ற வல்லது.

ஆஸ்துமா க்ஷய ரோகம் நீங்க

toothuvali herbal medicinal purpose

மேற்கண்ட வியாதிகளினால் கஷ்டப்படுபவர்களுக்கு துாதுவளை சாறு ஒரு நிவாரணியாகும். இதன் இலையைக் கொண்டு வந்து முள் நீக்கி சுத்தமாக கழுவிஇடித்து சாறு எடுத்துக்கொள்ளவும். சாறு 4 ஸ்பூன் தேன் 2 ஸ்பூன் என கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். இதுபோன்று இரண்டு மாதங்கள் தொடர்ந்து சாப்பிடவும். இதனால் ஆஸ்துமா ,க்ஷயரோகம் ஆகியவைகள் நீங்கும். அத்துடன் மற்றும் சில வியாதிகள் இருந்தாலும் நீங்கி விடும். இதனைத்தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய்நொடி இல்லாமல் வாழலாம்.

தொடர்தும்மல் நிற்க

சில சமயம் தும்மல் உண்டானால் நிற்காமல் தொடர்ந்து தும்மிக்கொண்டே இருக்கவேண்டிய நிலை உண்டாகிவிடும். இதனை நிறுத்தஒரு முறை துாதுவளை இலையுடன் 5 மிளகைச் சேர்த்து சிறிது நீர்விட்டு மைய அரைத்து 750 மி.லி. நீர் விட்டு கொதிக்க வைத்து பின்னர் பால் சர்க்கரை சேர்த்துக்குடித்தால் தொடர்தும்மல் காணாமல் போய்விடும்.

நன்றி:சூர்யநாத்.                                                                                                                     

Tags:    

Similar News