அக்னிபத் எதிர்ப்பு போராட்டத்தினர் உ.பி.,யில் 260 பேர் அதிரடி கைது..!

உ.பி.,யில் அக்னி பத் எதிர்ப்பு போராட்டத்தினர் 260 பேர் இதுவரை கைது செய்யப்பட்டதாக, அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-06-18 05:44 GMT

இந்திய ராணுவ வீரர்கள் (கோப்பு படம்)

]ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.பீகாரில் ராணுவ வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் பல்வேறு இடங்களில் ரயில்களை மறித்தனர்.

இதேபோல உத்தரப்பிரதேசத்திலும் அக்னிபத் திட்டத்திற்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். உத்தர பிரதேசத்தில் உள்ள பல்லியா ரயில் நிலையத்தில், போராட்டத்தினர் ரயிலை சேதப்படுத்தினர். உத்தரபிரதேசத்தில் 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக போராட்டம், கல்வீச்சு, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக 260 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

அக்னிபாத் திட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு போராட்டம் கிளம்பி இருந்தாலும் மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது, துணை ராணுவத்திலும் அக்னிபத் பயிற்சி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வாய்ப்பு தருவது என முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News