/* */

மாசற்ற தீபாவளி கொண்டாட திருவண்ணாமலை ஆட்சியர் முருகேஷ் வேண்டுகோள்

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியைக் கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

மாசற்ற தீபாவளி கொண்டாட திருவண்ணாமலை ஆட்சியர்  முருகேஷ்  வேண்டுகோள்
X

விபத்து ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியைக் கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வேண்டுகோள்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது :

தீபாவளி திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாள் ஆகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

அதேவேளை பட்டாசுகளை வெடிப்பது நம்மை சுற்றியுள்ள நிலம் , நீர் , காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள், வயதான பெரியவர்கள் மற்றும் நோய் வாய்ப்பட்ட வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

மாண்புமிகு உச்சநீதிமன்றம் தனது ஆணையில் பட்டாசுகளை வெடிப்பது காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் திறந்தவெளியில் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மாண்புமிகு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு கடந்த 3 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே பொது மக்கள் பட்டாசுகளை வெடிக்க நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும் கடந்த ஆண்டை போலவே காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடி களை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள் , வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க வேண்டும். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Updated On: 31 Oct 2021 1:18 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல...
  2. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே கழிவு கிட்டங்கியில் தீ விபத்து
  3. நாமக்கல்
    பொத்தனூர் பச்சைமலை முருகன் கோவிலுக்கு புதிய கிரிவலப்பாதை
  4. நாமக்கல்
    வளையப்பட்டி பகுதியில் 18ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிப்பு
  5. இந்தியா
    என்னது..கல்யாணத்துக்கு மாப்பிள்ளை இதெல்லாம் கேட்டாரா..?
  6. நாமக்கல்
    ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  7. உலகம்
    ஜப்பானில் பரவும் சதை உண்ணும் பாக்டீரியாக்கள்! இரண்டு நாட்களில்...
  8. திருவள்ளூர்
    குப்பை கழிவுகளால் ஏரி தண்ணீர் மாசுபடும் அபாயம்
  9. Trending Today News
    காற்றில் டைவ் அடித்த திமிங்கலம்..! வீடியோ வைரல்..! (செய்திக்குள்...
  10. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 42.63 அடியாக சரிவு