நாமக்கல் மாவட்டத்தில் 184 பேருக்கு கொரோனா தொற்று

நாமக்கல் மாவட்டத்தில் 184 பேருக்கு கொரோனா தொற்று
நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒருநாள் 184 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது; பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, 44,327.ஆக அதிகரித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், ப.வேலூர், சேந்தமங்கலம், காளப்பாநாய்க்கன்பட்டி, நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், வெப்படை, திருச்செங்கோடு, பெரியமணலி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, 184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 44,327 ஆக உயர்ந்துள்ளது. இன்று 293 பேர் சிகிச்சை குணமடைந்து வீட்டுக்கு திரும்பினர். இதுவரை மொத்தம் 42,108 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மொத்தம் 1,805 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 414ஆக உயர்ந்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story