நாமக்கல் வாரச்சந்தையில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

நாமக்கல் வாரச்சந்தையில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் வாரச்சந்தையில் ஆடு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

நாளை (ஜூன் 17) பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் வாரச்சந்தையில் ஒரே நாளில் ரூ. 2 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனையானது.

நாளை (ஜூன் 17) பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் வாரச்சந்தையில் ஒரே நாளில் ரூ. 2 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனையானது.

பக்ரீத் பண்டிகை, உலக அளவில் முஸ்லீம் சமூகத்தினரால் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை, ‘ஹஜ் பெருநாள்’ எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த பக்ரீத் பண்டிகைக்கு ஆடு, மாடு, ஒட்டகம் என வாங்கி பலியிட்டு, இஸ்லாமியர்கள், அவர் அவர்கள் வசதிக்கேற்ப ஏழைகளுக்கு தானமாக வழங்கி பக்ரீத்தை கொண்டாடுவார்.

தமிழகத்தில் நாளை (ஜூன் 17) பக்ரீத் பண்டிகை கொண்டாடுகிறது. இதையொட்டி, நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நாமக்கல் வாரச்சந்தையில், அதிகாலை 5 மணி முதல் ஆடு விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதில் சேலம், கோவை, திருச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், உள்ளூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

அவ்வாறு கொண்டுவரப்பட்ட ஆடுகள், எடைக்கு ஏற்றபடி குறைந்தபட்சம், ஒரு ஆடு ரூ. 10,000 முதல், அதிகபட்சமாக 30,000 வரை விற்பனையானது. அதேபோல், ஆட்டு குட்டி ரூ. 500 ரூபாய் முதல் ஆயிரம் வரை விற்பனையானது. ஆடுகளை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கினர். வாரச்சந்தையில் வெள்ளாடுகளை காட்டிலும், செம்மறி ஆடுகள் விற்பனை அதிக அளவில் நடந்தது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நேற்று ஒரே நாளில் மட்டும், ரூ. 2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது. ஆட்டின் விலை அதிகரித்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story