திருத்தணி அருகே களைக்கட்டியது ஆட்டுச் சந்தை: ரூ.20 லட்சத்துக்கு விற்பனை
Goat Market - திருத்தணி அருகே களைக்கட்டியது ஆட்டுச் சந்தையில் ரூ.20 லட்சத்துக்கு விற்பனையானது.
Goat Market -திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டை, அத்திமாஞ்சேரிப்பேட்டை, ஆர்.கே.பேட்டை, வங்கனூர், அம்மையார்குப்பம், பாண்றவேடு, கேசவராஜ்குப்பம், புண்ணியம் உட்பட 20க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் கிராம ஜாத்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.
ஜாத்திரை திருவிழாவையொட்டி, பொதட்டூர்பேட்டையில் ஆட்டுச் சந்தை நடைபெற்றது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆடுகள் வளர்ப்போர், வியாபாரிகள் சந்தையில் அடுகள் விற்பனைக்கு ஓட்டி வந்தனர். ஜாத்திரை திருவிழாவில் அம்மனுக்கு வேண்டுதல் செலுத்தவும், உறவினர்களுக்கு விருந்து வைக்க ஏதுவாக பொதுமக்கள் ஆர்வத்துடன் சந்தைக்கு வந்து ஆடுகள் வாங்கிச் சென்றனர்.
விலை அதிகமாக இருந்தாலும் பொதுமக்கள் போட்டா போட்டியுடன் ஆடுகளை வாங்கிச் சென்றனர். ஒரு நாள் ஆட்டுச் சந்தையில் ரூ.20 லட்சம் வரை வர்த்தகம் நடைபெற்றதாக ஆட்டு வியாபாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2