கொசத்தலை ஆற்றில் மூழ்கிய இரண்டு சிறுவர்கள் பலி

Kosasthalaiyar River -திருத்தணி அருகே, கொசத்தலை ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.;

Update: 2022-10-17 04:15 GMT
கொசத்தலை ஆற்றில் மூழ்கிய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

Kosasthalaiyar River -திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்து திருவலாங்காடு உள்ளது. இதன் அருகே உள்ள மணவூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் கோகுல்(15).  அதே கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன் மகன் நிரஞ்சன்(17) இருவரும் நண்பர்கள். நிரஞ்சன், கோகுல் இருவரும் அருகே உள்ள கொசத்தலை ஆற்றில் குளிக்க சென்றனர் இருவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில், நீரில் இறங்கி ஆழமான பகுதியில் சென்று குளித்தபோது, இருவரும் சேற்றில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இதுகுறித்து உடனடியாக போலீஸ், மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார், அப்பகுதி மக்களின் உதவியோடு ஆற்றில் இறங்கி நீண்ட நேரம் தேடி சிறுவர்களின் சடலங்களை மீட்டனர். அரசு மருத்துவமனைக்கு, சடலங்களை அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்..


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News