திருவாலங்காடு வடாரண்யேஸ்வர் ஆலய மகா கும்பாபிஷேகம்: பக்தர்கள் சாமி தரிசனம்
திருவாலங்காடு வடாரண்யேஸ்வர் ஆலய மகா கும்பாபிஷேகம் . பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.;
திருத்தணி அருகே திருவாலங்காடு வடாரண்யேஸ்வர் ஆலயத்தில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.
திருத்தணி முருகன் கோயிலின் துணை கோயிலாக விளங்குவது திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் ஆலயம். நடராஜ பெருமான் .திரு நடனம் புரிந்த ஐந்து சபைகளில் முதல் சபையான இரத்தின சபை என்றும் அழைக்கப்படுகிறது.
காரைக்கால் அம்மையார் தலையால் நடந்துவந்து மீண்டும் பிறவா வரம் வேண்டி எம்பெருமானின் திருவடியின் கீழ் என்றும் வீற்றிருக்கும் பேறு பெற்றதுமான புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலமானது இவ்வாலயம்.
இந்த ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோபுரங்கள் மண்டபம் புனரமைக்கப்பட்டு, வண்ணங்கள் தீட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை அமைத்து ஹோமகுண்டம் நிறுவி கலசங்கள் நிறுத்தி சிவாச்சாரியார்கள் மூலம் கடந்த மூன்று நாட்களாக பூஜைகள் நடைபெற்று வந்தன.
மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரர்கள் புனித நீர் அடங்கிய கலசங்கள் தலையில் சுமந்து படி ஊர்வலம் புறப்பட்டு கோயில் விமான கோபுர கலசங்கள் மீது ஊற்றி அபிஷேகம் செய்து தீபாரதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் மூலவருக்கு பால்,தயிர், சந்தனம்,இளநீர்,ஜவ்வாது, தேன்,திருநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து பின்னர் பட்டு உடையை காலம், வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் சென்னை திருவள்ளூர் திருவாலங்காடு திருத்தணி அரக்கோணம் உள்ளிட்ட பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவில் சுவாமி தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.