திருத்தணி முருகன் கோயிலில் 8 நாட்களில் ரூ.1 கோடி உண்டியல் காணிக்கை

திருத்தணி முருகன் கோயிலில் 8 நாட்களில் ரூ.1 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளது.

Update: 2023-08-04 05:30 GMT

திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5-படை திருக்கோயிலாகும். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் ஆந்திர மாநிலம், கர்நாடகா மாநிலம், கேரளா, பாண்டிச்சேரி, உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு திருத்தணி முருகன் கோயிலுக்கு வருகிறார்கள்.

மேலும் வாரத்தில் கடைசி நாளான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களிலும் அதிக அளவு பக்தர்கள் திருக்கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வருகிறார்கள். பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு நேர்த்தி கடனாக உண்டியலில் பணம் மற்றும் நகையாக செலுத்துகின்றனர்.

மேலும் திருத்தணி முருகன் கோயில் உடன் இணைந்த 30 உப கோவில்களில் உண்டியல் காணிக்கை களையும் சேர்த்து பக்தர்கள் செலுத்தும் பணம் & நகை ஆகியவற்றை எண்ணுவதற்கு தமிழக இந்து அறநிலைத் துறை ஆணையரிடம் அனுமதி பெற்று திருத்தணி முருகன் கோயில் துணை ஆணையர் / செயல் அலுவலர் ப.விஜயா அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதர், அறங்காவலர்கள் சுரேஷ் பாபு, நாகன், மோகனன், உஷா ரவி உஷா, முன்னிலையில், மலைக் கோவிலில் வசந்த மண்டபத்தில் திருக்கோயில் பணியாளர்கள் & மற்றும் தன்னார்வலர்கள் . மூலமாக உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன.

இந்த உண்டியல் காணிக்கை விவரங்களை திருத்தணி திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளனர்., அதில் ரூ.1,08,40,908/- பணமும், தங்கம்-339 .கிராமும், 3) வெள்ளி-6,842. கிராமும் பக்தர்கள் 8  நாட்களில் உண்டியலில் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியவை என்று முருகன் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News