கல்குவாரி குட்டையில் மூழ்கி மூன்று பேர் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை

திருத்தணி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி மூன்று பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2023-05-09 06:15 GMT

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருவண்ணாமலை மாவட்டம், பார்வதி புரம் பகுதியை சார்ந்த மல்லிகா(60), ஹேமலதா(17), கோமதி (13). ஆகியோர் வந்துள்ளார்.

அப்போது மூவரும் அருகே உள்ள கல்குவாரி பகுதியில் உடல் உபாதை கைக்க சென்றிருந்தனர். நீண்ட நேரம் ஆகியும் இவர்கள் வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் இவர்களை தேடி கல்குவாரி பகுதியில் சென்றபோது மூவரும் கல்குவாரி குட்டையில் மூழ்கி இறந்து போனது தெரிய வந்தது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து உயிரிழந்த மல்லிகா, ஹேமலதா, கோமதி. ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மூவரும் உயிரிழந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News