திருத்தணி மக்களுக்கு காய்கறி தொகுப்பு: முன்னாள் எம்எல்ஏ நரசிம்மன் வழங்கினார்!
திருத்தணி அருகே வேலஞ்சேரி ஊராட்சியில் அப்பா அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு காய்கறி உள்ளிட்ட தொகுப்புகளை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மன் வழங்கினார்.;
திருத்தணி அருகே வேலஞ்சேரி கிராமத்தில் அப்பா அறக்கட்டளை சார்பில் கொரோனா ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதி ஏழை, எளிய மக்களுக்கு முன்னாள் தலைமை அரசு கொறடாவும் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான நரசிம்மன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு காய்கறிகள் வழங்கினார்.
இதில் வேளச்சேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் தலைமையில் அரசு உரிமை இயல் வழக்கறிஞர் ராஜபாண்டியன், திருத்தணி நகராட்சி முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.