திருத்தணி காப்புகாடு: தண்ணீர்தேடி வந்த புள்ளிமான் ரயிலில் அடிபட்டு பலி

திருத்தணியில் தண்ணீர் தேடி காப்பு காட்டில் இருந்து வெளியே வந்த புள்ளிமான் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தது.

Update: 2021-05-26 12:55 GMT

ரயிலில் அடிபட்டு உயிரிழந்த புள்ளிமான்

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். குளிர்ச்சியான பானங்களை தேடி அலையும் நிலை ஏற்படுகிறது. அதேபோன்று இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காப்புக்காடு பகுதியிலிருந்து தண்ணீர் இல்லாததால் புள்ளிமான் ஒன்று வெளியேறி வந்துள்ளது.

திருத்தணி ரயில் நிலையம் அருகே உள்ள பழைய தர்மராஜா கோயில் பகுதியின் எதிரே உள்ள தண்டவாளத்தை புள்ளிமான் கடக்க முயன்றது. அப்போது அவ்வழியாக சென்ற ரயிலில் அடிபட்டு புள்ளிமான் உயிரிழந்துள்ளது. இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் வனத்துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்து புள்ளிமானின் உடலை மீட்டு காப்புக்காடு பகுதியில் நல்லடக்கம் செய்தனர்.

காப்புக்காடு பகுதியில் உள்ள வன விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறப்பதையும் ரயில்களில் அடிப்பட்டு இறப்பதையும் தவிர்க்க, காப்புக்காடு பகுதியில் குடிநீர் வசதியை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News