திருத்தணி முருகன் கோவில் காலிப் பணியிடங்களில் சேர பணம் கொடுக்காதீர் - நிர்வாகம்
திருத்தணி முருகன் கோவிலில் காலி பணியிடங்களில் சேர இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம் என நிர்வாகம் எச்சரித்துள்ளது.;
பைல் படம்.
திருத்தணி முருகன் கோயில் மற்றும் அதன் 28 உபகோவில்களில் அர்ச்சகர், மேளம் தாளம் உதவியாளர்கள் உட்பட மொத்தம் 50 காலிப்பணியிடங்களுக்கு முருகன் கோவில் தலைமை அலுவலகத்தில் கடந்த 13ம் தேதி முதல் இம்மாதம் 12ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
மொத்தம் 5496 பேர் விண்ணப்பம் வழங்கியவர்களில் 2,950 பேர் மட்டுமே விண்ணப்பத்தை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். விண்ணப்பம் செய்தவர்களிடம் சிலர் பெருந்தொகை வசூலிப்பதாக கோவில் நிர்வாகத்திற்கு தெரிந்தது.
இதையடுத்து கோவில் நிர்வாகம் தலைமை அலுவலகத்தில் துண்டு பிரசுரம் ஒட்டி நேற்று அறிவித்துள்ளது. அதில் பூர்த்தி செய்து வந்துள்ள விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியானவர்களிடம் வெளிப்படைத்தன்மையுடன் துறை ஆணையர் வல்லுநர்கள் குழுவினர் மூலம் நேர்காணல் நடத்தி தகுதி வாய்ந்தவர்களுக்கு பணிநியமனம் செய்யப்படும்.
எனவே, விண்ணப்பதாரர்கள் எவரும் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். ஏமாந்தால் கோவில் நிர்வாகம் பொறுப்பாகாது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.