மாம்பாக்கம் சத்திரம் பேருந்து நிலையத்தில் வழிப்பறி: இருவர் கைது!
மாம்பாக்கம் சத்திரம் பேருந்து நிலையத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.;
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி இந்திராநகர் நகரை சேர்ந்தவர் ஹரி (34). இவர் திருத்தணியை அடுத்த மாம்பாக்கம் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள், திடீரென வாகனத்தை நிறுத்தி கத்தியைக் காட்டி மிரட்டி ஹரியிடம் இருந்த ரூ.1500 பணம் மற்றும் மொபைல் போனை பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றனர்.
அப்போது அவ்வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த திருத்தணி போலீசார், இரு வாலிபர்களையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சின்னராசு (21), சூர்யா (18) என்பதும் தெரியவந்தது. மேலும் ஹரியிடம் பணம் மற்றும் மொபைல்போன் பறித்ததையும் இருவரும் ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.