இடிந்து விழும் நிலையில் நீர் தேக்க தொட்டி!

ஆர்கே பேட்டை ராமாபுரம் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி அகற்றி புதிய தொட்டியை கட்ட பொதுமக்கள் கோரிக்கை.

Update: 2024-10-24 12:15 GMT

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தூண்கள் பழுதடைந்து காணப்படும் படங்கள்.

ஆர்.கே.பேட்டை அடுத்த இராமாபுரம் கிராமத்தில்இடிந்து விழும் நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டியை கட்ட பொதுமக்கள் கோரிக்கை.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதி, ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட சந்திர விலாசபுரம் ஊராட்சியில் உள்ள இராமாபுரம் 50 குடும்பங்களை சேர்ந்த 1000.க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

பகுதி மக்களின் குடிநீர் காக சுமார் 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி கட்டி சுமார் 30 ஆண்டுகள் ஆகிறது. இத்தொட்டியில் இருந்து காலை, மாலை என இரு வேலைகளில் தண்ணீரை சேமித்து வைத்து பைப்கள் மூலம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. பல வருடங்களுக்கு முன்பு இந்த குடிநீர் மேல்நிலைத் தேக்க தொட்டி ஆறுதல் தற்போது அதனை தாங்கிப் பிடிக்கும் தூண்கள் பழுதடைந்து அதில் உள்ள கான்கிரீட்டுகள் பெயர்ந்து அதில் உள்ள கம்பிகள் துருப்பிடித்து எந்த நேரத்திலும் தூண்கள் முறிந்து கீழே விழும் அபாயமும் உருவாகியுள்ளது.

இதனை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் மனு கொடுத்தும் வலியுறுத்தியும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் பகுதியில் இத்தொட்டி இருப்பதால் கீழே விழுந்தால் உயிர்பலி வாங்கும் சூழ்நிலையும் உருவாகி இருக்கிறது. எனவே தற்போதாவது சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மக்கள் நலனை கருதி இந்த பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்ற வேண்டும் என கிராம பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News