லிங்க வடிவிலான சிவப்பெருமான் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

வேலஞ்சேரி லிங்க வடிவ சிவப்பெருமான் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Update: 2022-01-28 05:15 GMT

லிங்க வடிவிலான சிவப்பெருமான் கோயில் மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வேலஞ்சேரியில் பழமையான லிங்க வடிவிலான ஸ்ரீ சர்வ மங்களேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இங்கு,  12 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கோயில் மற்றும் லிங்கம் திருப்பணிகள் மேற்கொண்டு மூன்று நாட்கள் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருக்கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு கணபதி பூஜை, ஜோபூஜை, நவகிரஹ பூஜை உட்பட தீபாராதனை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. மூலமந்திர ஹோமங்கள் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று,  ஸ்ரீ மங்களேஸ்வரர் லிங்கத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது திருக்கோயில் அருகில் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் சிவ சிவா என்ற பக்தி முழக்கங்களுடன் சிவப்பெருமான வழிபட்டனர்.

பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும் ஸ்ரீ மங்களாம்பிகை சமேத மங்களேஸ்வரருக்கு அபிஷேக பூஜைகள் அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அங்கு வந்திருந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் மற்றும் கிராம பொதுமக்கள்,  மஹா கும்பாபிஷேக ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News