திருத்தணி அருகே ஸ்ரீ பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா :பக்தர்கள் தரிசனம்
Temple Kumbabiseka Function அம்மையார்குப்பம் மன்னாதீஸ்வரர் சமேத ஸ்ரீ பச்சையம்மன் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.;
Temple Kumbabiseka Function
அம்மையார்குப்பம் கிராமத்தில் ஸ்ரீ பச்சையம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.
Temple Kumbabiseka Function
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதி, ஆர்.கே. பேட்டை அருகே அம்மையார்குப்பம் மன்னாதீஸ்வரர் சமேத ஸ்ரீ பச்சையம்மனுக்கு புதிதாக கோயில் கட்டப்பட்டு மகா கும்பாபிஷேக விழா யொட்டி முதல் காலயாக சாலை பூஜைகள் நடைபெற்றது. இன்று அதிகாலை கணபதி பூஜை,கோ பூஜை, லட்சுமி பூஜை, மஹாபூர்ணாஹூதி ஹோம, உள்ளிட்ட யாகசாலை பூஜைகளை அடுத்து யாக சாலையில் இருந்து புனித நீரை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேள தாளங்கள் முழங்க கோவில் சுற்றி வலம் வந்து பின்னர் ஆலய கோபுரத்தின் மீதுள்ள கலசத்திற்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது. அங்கு வந்திருந்த திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
Temple Kumbabiseka Function
கும்பாபிஷேகத்தன்று தீர்த்த கலசங்கள் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
பக்தர்கள் ஓம் சக்தி ஓம் சக்தி என முழக்கங்களை பக்தி பரவசத்துடன் எழுப்பினர். இதன் பின்னர் ஆலயத்தில் உள்ள அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். ஆலயத்திற்கு வந்திருந்த திரளான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் பிரசாதமும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை அம்மன் முக்கிய வீதி வழியாக திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது இதனைத் தொடர்ந்து நாளை முதல் 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் விழா குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.