State Level Music Competition First Prize திருத்தணி அருகே அரசு பள்ளி மாணவன் இசை போட்டியில் மாநிலஅளவில் முதலிடம்

State Level Music Competition First Prize திருத்தணி அருகே ஆர். கே.பேட்டை அரசுப்பள்ளி மாணவன் திருச்சியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் இசை போட்டியில் முதலிடம் பிடித்தார். மாணவனுக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

Update: 2023-12-02 06:15 GMT

இசை மழை பொழியும் அரசுப் பள்ளி மாணவன் கலைத் திருவிழாவில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தமைக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். 

State Level Music Competition First Prize

அரசுப் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் தனித் திறமையை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித் துறை சார்பில் ஆண்டு தோறும் கலைத் திருவிழா நடைபெற்று வருகின்றது. பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் நடைபெற்று சமீபத்தில் மாநில அளவில் திருச்சியில் கலைத் திருவிழா நடைபெற்றது. நடைபெற்ற இந்த கலைத்திருவிழா இசை போட்டியில் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே வங்கனூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் டேனியேல் என்ற மாணவன் ஹார்மோனியம் வாசிப்பில் மாநில அளவில் முதலிடம், டிரம்ஸ் வாசிப்பில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

State Level Music Competition First Prize



அம் மாணவனை பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை ஆசிரியர்கள் இணைந்து வெகுவாக பாராட்டி நினைவு பரிசு வழங்கினர். கிராமப்புற பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் மாணவன் டேனியேல் கூறுகையில்… தனியார் பள்ளியில் இசை ஆசிரியராக பணியாற்றி வரும் எனது தந்தை ஜெபக்குமாரின் ஊக்கத்தால், எனக்கு 8 வயது முதல் இசை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.ஹார்மோனியம், டிரம்ஸ், கீ போர்ட் இசை பயிற்சியில் ஆர்வம் உள்ளது. தமிழ்நாடு அரசு கலைத் திருவிழா மூலம் எனது இசை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற கலைத் திருவிழாவில் கீ போர்ட் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்து தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க.ஸ்டாலின் சான்று மற்றும் விருது பெற்றதாக பெருமிதம் தெரிவித்தார். எனது இசை பயணத்தில் எனது தந்தை, ஆசிரியர்கள், சக நண்பர்கள் ஊக்கம் பெரும் உதவியாக உள்ளது, எதிர்காலத்தில் சிறந்த இசை அமைப்பாளராக வர வேண்டும் என்பதே லட்சியம் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News