பங்குனி உத்திரம்: திருத்தணி முருகன் கோவில் சிறப்பு வழிபாடு.

பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது

Update: 2023-04-05 05:15 GMT

சிறப்பு அலங்காரத்தில் முருகன், வள்ளி தெய்வானை

திருத்தணி முருகன் கோவிலில் பங்குனி உத்திர பெரும் விழாவை முன்னிட்டு கோவிலுக்கு படை எடுத்த பக்தர்கள் கூட்டம் 3.மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்

திருத்தணியில் பங்குனி உத்திர பெருவிழாவை விழாவை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம். ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும்.

இக்கோவிலில் பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு கோவில் கருவறையில் உள்ள மூலவருக்கு அதிகாலை 5 மணி அளவில் பால், தயிர், சந்தனம், மஞ்சள், தேன், இளநீர், ஜவ்வாது, உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பட்டு உடைகளாலும், வண்ண மலர்களால், திரு ஆபரணங்களாலும். அலங்காரம் செய்து தீப, தூப, ஆராதனை நடைபெற்றது.

பின்னர் 300.க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் தலையில் சுமந்தும், மயில் காவடி, புஷ்ப காவடி, பன்னீர் காவடி எடுத்தும். மலையடி வாரத்தில் உள்ள கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என்று கோஷங்களை எழுப்பி பக்தி பரவசத்தில் ஊர்வலமாக மலைக் கோவிலுக்கு வந்தனர்.

பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலை மண்டபத்தில் உற்சவருக்கு பஞ்சாமிர்தம், திருநீர், நாட்டு சர்க்கரை, பால், தயிர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களாலும் திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

இதனை அடுத்து முருகப்பெருமாள் வள்ளி, தெய்வானை வெள்ளி மயில்வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தமிழக மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி என பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்ததால் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 3.மணி நேரத்திற்கு மேலாகவே காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.கோவில் சுற்றி பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News