திருத்தணிக்கு வந்த சசிகலாவுக்கு வழியெங்கும் சிறப்பான வரவேற்பு

Sasikala News- திருத்தணிக்கு வந்த சசிகலாவுக்கு வழியெங்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.;

Update: 2022-06-27 02:00 GMT

சசிகலா

Sasikala News- திருத்தணிக்கு வந்த சசிகலாவுக்கு பொதுமக்கள் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது மேலும் உள்கட்சி மோதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ள நிலையில், சசிகலா தனது அரசியல் புரட்சி பயணத்தை தொடங்கினார். சென்னையில் இருந்து திருத்தணி சென்ற சசிகலாவிற்கு அவரது ஆதரவாளர்கள் பல இடங்களில் அதிமுக கொடியுடன் வழி எங்கும் தொண்டர்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சசிகலா, அதிமு கழகத்தை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. எனது தலைமையில் அதிமுக இருக்க வேண்டும் என கட்சி தொண்டர்கள் விரும்புகின்றனர். எனக்கு வரும் வழியிலே தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதிமுகவின் தற்போதைய நிலை கவலை அளிக்கிறது. இது நிச்சயம் சரி செய்து மீண்டும் தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி அதிமுக என்று நினைக்கும் அளவில் எனது செயல்பாடுகள் இருக்குமென இந்தக் கட்சி சாதாரண கட்சியல்ல புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி மறைந்த அம்மா சொல் கேப்ப நூறு ஆண்டுகள் கடந்து கழகம் இருக்கும் என்று அம்மா சொன்னார். அதேபோன்று அதிமுக கழகத்தை ஒற்றைப் பாதையில் கொண்டு செல்வேன்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒரு தலைமையின் கீழ் அதிமுக நிச்சயம் வரும். . எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுக ஏழை எளியோர்களுக்கான கட்சி.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2-வது முறையாக ஏற்பட்டுள்ள சிக்கலை நிச்சயம் சரி செய்வோம். அனைத்து மாவட்டங்களிலும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்வேன். என்னுடன் அதிமுகவின் தொண்டர்களும் உள்ளனர்" என்றார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News