குடிநீரில் கலந்த கழிவு நீர்: கிராம மக்கள் மருத்துவமனையில் அனுமதி

பள்ளிப்பட்டு அடுத்த பெருமாநல்லூர் ஊராட்சியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2024-05-26 08:45 GMT

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கிராம மக்கள்.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம் பெருமாநல்லூர் ஊராட்சி காலனியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடிதண்ணீர் பைப் லைன் உடைப்பு ஏற்பட்டு இதில் கழிவு நீர் கலந்து உள்ளது என்று இந்த ஊராட்சியை சேர்ந்த மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கும், பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதனை சிறிதும் கண்டு கொள்ளாமல் மெத்தனப்போக்குடன் ஊராட்சி நிர்வாகமும் செயல்பட்டு வந்துள்ளனர். இதனால் அந்த குடிதண்ணீரை கழிவு நீர் கலந்த தண்ணீரை பொதுமக்கள் அறியாமல் அருந்தி வந்துள்ளனர்.

இதன் எதிரொலியாக இந்த பகுதியை சார்ந்த குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என பத்துக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டு மார்பு வலி ஏற்பட்டு இவர்கள் அனைவரும் திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் பொதட்டூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இந்த பகுதி மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மெத்தனப்போக்குடன் நடந்து கொண்ட ஊராட்சி நிர்வாகத்தின் மீதும் பஞ்சாயத்து நிர்வாகத்தின் மீதும் உடனடியாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து சுகாதாரமான குடிதண்ணீர் கிடைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News