திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 262 குற்ற வழக்குகளுக்கு தீர்வு
திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 262 குற்ற வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.;
திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதி மன்றம்.
திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் பெயரில் திருவள்ளூர் மாவட்ட நீதிமன்ற கண்காணிப்பில் நாடு தழுவிய மக்கள் நீதி மன்றம் நடைபெற்றது, இதில் சுமார் 200 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதில் 32 மோட்டார்வாகன விபத்து இழப்பீடு வழக்குகளுக்கு சமரசம் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு ரூ. 1கோடி 70 லட்சம் பெற்றுத்தரப்பட்டது. 6 சிவில் வழக்குகள் சமரசம் செய்யப்பட்டது, வங்கி வழக்குகள் 11 பைசல் செய்யப்பட்டது. குற்ற வழக்குகள் 262 தீர்வு காணப்பட்டது.
குடும்ப நல வழக்கு ஒன்றிற்கு சமரசம் செய்யப்பட்டு தம்பதியர்கள் சேர்த்து வைக்கப்பட்டது. மொத்தம் 1கோடியே 74லட்சம் தீர்வுக்காணப்பட்டது.
இந்நிகழ்வில் பொறுப்பு சார்பு நீதிபதி மற்றும் வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் அருந்ததி, குற்றவியல் நடுவர் லோகநாதன், மாவட்ட உரிமையியல் நீதிபதி கவிப்பிரியா கலந்து கொண்டனர். மேலும் மூத்த வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள் பயனாளிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.