லாரி மூலம் ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஓட்டுநர் கைது

திருத்தணி அருகே லாரி மூலம் ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசியுடன் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-17 02:15 GMT

லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த நரசம்பேட்டை அருகில் ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இத்தகவலின் பேரில் ஆர்.கே பேட்டை வட்ட வழங்கல் அலுவலர் சேகர் தலைமையில் வருவாய்த்துறையினர் நரசம்பேட்டை பகுதியில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது திருத்தணியிலிருந்து ஆந்திரா நோக்கி சென்றுகொண்டிருந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த லாரியில் சுமார் 15 டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து ரேஷன் அரிசியை கடத்தி சென்ற சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் மனோகர்(48) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் அரிசியை ஆந்திராவிற்கு கடத்தி செல்வதாக லாரி ஓட்டுனர் ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து,  அவரை திருவள்ளூர் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்து. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியுடன் லாரியை வருவாய்த்துறையினர் பள்ளிப்பட்டு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News