கனகம்மாசத்திரம் காவல் நிலையம் அருகே டாஸ்மாக் கடையில் பணம் கொள்ளை
கனகம்மாசத்திரம் காவல் நிலையம் அருகே டாஸ்மாக் கடையில் பணம், மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.;
சுவற்றில் துளையிட்டு கொள்ளையடிக்கப்பட்ட டாஸ்மாக் கடை.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் காவல் நிலையம் அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு, உள்ளே புகுந்த கொள்ளையர்கள் டாஸ்மாக்கில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் பணம், 480 மது பாட்டில்கள், மற்றும் கடையில் பொருத்தியிருந்த டிவி, சிசிடிவி கேமரா, ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து கடை ஊழியர்கள் கனகம்மா சத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து கனகம்மாசத்திரம் போலீசார் அந்த கடையின் அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
கனகம்மாசத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடந்து வருவதால் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.