தண்ணீர் தேடி கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான்கள் மீட்பு

திருத்தணியில் விவசாய கிணற்றில் தவறி விழுந்த இரண்டு புள்ளிமான்கள் மீட்கப்பட்டன.

Update: 2024-03-01 03:45 GMT

கிணற்றில் தவறு விழுந்த புள்ளி மான்கள்.

திருத்தணி அருகே வனப்பகுதியில் இருந்து தண்ணீரை தேடி விவசாயி கிணற்றில் தவறு விழுந்த இரண்டு புள்ளி மான்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் தற்போது வெயிலின் தாக்கத்தால் பல்வேறு வனப்பகுதியில் தண்ணீர் இன்றி வரண்டு காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள மான்கள் தண்ணீர் தேடி விவசாய நிலங்கள் மற்றும் கிராம பகுதிகளில் சுற்றி வருகின்றன.

இந்த நிலையில் திருத்தணி காப்புக் காட்டில் இருந்து தண்ணீர் தேடி வந்த இரண்டு புள்ளிமான்கள் திருத்தணி அருகே தும்பிகுளம் கிராமத்தை சேர்ந்த துரைசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதனைக் கண்ட விவசாயி துரைசாமி அதிர்ச்சி அடைந்து இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் நேரத்துக்கும் மேலாக போராடி கிணற்றில் இருந்த இரண்டு புள்ளி மான்களை பிடித்து பின்னர் கயிறின் மூலம் பத்திரமாக மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.அதன் பின் இரண்டு மான்களுக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து பின் வனப்பகுதியில் விடப்பட்டது.

Tags:    

Similar News