Public Request Road Facilities மயானத்திற்கு செல்ல பாதை அமைத்து தர பொதுமக்கள் கோட்டாட்சியரிடம் மனு
Public Request Road Facilities திருத்தணி அருகே மயானத்திற்குசெல்ல பாதையை அமைத்து தர வேண்டும் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திருத்தணி கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.;
திருத்தணி அருகே மயானத்திற்கு பாதை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை மனுவை கோட்டாட்சியரிடம் வழங்கினர் கிராம மக்கள்.
Public Request Road பாசிலிட்டிஸ்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம் செருக்கனுார் காலனியில், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பயன்படுத்தப்படும் மயானத்திற்கு பகுதிக்கு முறையாக சாலை இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும், வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்யும் போது கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சுடுகாடு பாதை அமைப்பதற்கு தனிநபரின் சொந்தமான நிலம் விட வேண்டும்.நிலப்பிரச்னை காரணமாக பல ஆண்டுகளாக மயானத்திற்கு சாலை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் தனிநபர், மயானத்திற்கு பாதை அமைப்பதற்கு தேவையான நிலத்தை ஊராட்சி மன்ற தலைவர் சின்னத்தம்பி இடம் இடத்தின் உரிமையாளர்கள் தங்களிடங்களை தானமாக வழங்குவதாக சம்பந்த பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளனர்.
Public Request Road Facilities
இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் சின்னத்தம்பி தனது சொந்த செலவில் மண்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். இந்த பாதை அமைப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து செருக்கனுார் காலனி சேர்ந்த, 100 க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு டிராக்டர் மூலம் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று பின், கோட்டாட்சியரிடம் சுடுகாடு பாதை அமைப்பதற்கு, எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, மயானத்திற்கு பாதை அமைத்து தர வேண்டும் எனவும் மேலும் தங்கள் கிராமத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து ஒரே வீட்டில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் வசித்து வருவதாகவும், ஆகையால் கிராமத்தின் அருகே உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் எடுக்கப்படவுள்ள நிலத்தை பணம் பறிக்கும் சில சமூகவிரோதிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து எங்கள் கிராமத்திற்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்ற கோட்டாட்சியர் தீபா உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.