திருத்தணி அருகே10-வது தேசிய கைத்தறி தினம்; நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருத்தணி அருகே ஆர். கே.பேட்டையில்10 -வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நெசவு தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் மற்றும் மருத்துவ முகாமை எம்எல்ஏ சந்திரன் தொடங்கி வைத்தார்.

Update: 2024-08-09 06:30 GMT

திருத்தணி, ஆர். கே.பேட்டையில்10 -வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நெசவு தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. 

திருத்தணி அடுத்த ஆர்.கே. பேட்டையில் 10-வது தேசிய கைத்தறி தினம் நெசவுத் தொழிலாளர்களுக்கு நல திட்டங்கள்,மருத்துவ முகாம், நிகழ்ச்சியை தொடங்கி வைத்து இந்த தொகுதியில் நெசவுத் தொழிலாளர்களுக்கு ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார் சட்டமன்ற உறுப்பினர் சந்திரன்.


திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சட்டமன்ற தொகுதி ஆர்.கே பேட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் கைத்தறித்துறை சார்பில் 10-வது தேசிய கைத்தறி தினம் கைத்தறி நெசவாளர்களுக்கு நல திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அனைவரையும் உதவி இயக்குனர் சத்தியபாமா வரவேற்றார்.வருவாய் கோட்டாட்சியர் தீபா, திருத்தணி துணை காவல் கண்காணிப்பாளர் விக்னேஷ் தமிழ்மாறன் ஆகியோர் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மேற்கு தி.மு.க மாவட்ட செயலாளரும், திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.சந்திரன் கலந்து கொண்டு நிகழ்ச்சியின் முன்னதாக குத்துவிளக்கை ஏற்று வைத்து நெசவு தொழிலாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் பேசியதாவது,

கைத்தறி தொழிலானது இந்திய திருநாட்டின் பாரம்பரிய தன்னிகரற்ற கைவினை தொழிலாக இருப்பதோடு நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்திற்கு தொடர்புடையதாக அமைந்துள்ளது.

இத்துறையானது கிராமப்புற பகுதிகளின் வசிக்கும் மக்களுக்கு பெருமளவு வேலைவாய்ப்பு வழங்குவதில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மிக முக்கியமான தொழிலாக விளங்குவதோடு இந்திய நாட்டின் மாநிலத்தின் பொருளாதாரத்தின் கணிசமான வருவாய் ஈட்டுவதுடன் அந்நிய சலாவணி ஈட்டவும் வழி வகிக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்  ஆட்சியில் நெசவுத் தொழிலாளர்களுக்கு எண்ணற்ற பல நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வழியே திருத்தணி தொகுதியில் உள்ள நெசவுத் தொழிலாளர்களுக்கு அவர்கள் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்ற இந்தப் பகுதியில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கு இடம் பொதட்டூர்பேட்டை மற்றும் அம்மையார்குப்பம் போன்ற பகுதிகளில் பரிசீலனை செய்யப்பட்டு வெகு விரைவில் தமிழக முதல்வர் கரங்களால் நெசவுத் தொழிலாளர் பூங்கா இந்த பகுதியில் அமைக்கப்படும் என்று தொழிலாளர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் உறுதியளித்தார்.


இதனைத் தொடர்ந்து நெசவுத் தொழிலாளர்கள் 15 பேருக்கு முத்ரா கடன் வழங்கும் மூலமாக 7.5 லட்சம் காசோலையை பயனாளிகளுக்கு சந்திரன் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் கைத்தறி உதவி ஆய்வாளர் அருள்குமார், ஆய்வர் சித்ரா மற்றும் சுரேஷ்குமார் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகளும் நெசவுத் தொழிலாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Similar News