ஆரம்ப சுகாதார நிலையம் கொரோனா வார்டாக மாற்றப்படும்: எம்.எல்.ஏ சந்திரன்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கொரோனா சிறப்பு வார்டாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ சந்திரன் தெரிவித்துள்ளார்.;
திருவள்ளூர் மாவட்டம் பீரகுப்பம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கொரோனா சிறப்பு வார்டாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்போது முன்னேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பீரகுப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ் சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கிருந்த தலைமை மருத்துவ சந்திரசேகர் 32 படுக்கை வசதிகள் இருப்பதாக அப்போது தெரிவித்துள்ளார். ஆனால் நோயாளிகள் யாரும் இல்லை என்றும் அவர் தெரிவித்ததையடுத்து, நோயாளிகள் இல்லாததால் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கொரோனா சிறப்பு வார்டாக மாற்ற மாவட்ட நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் தெரிவித்தார்.