ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் வெட்ட சென்ற 5 பேர் திருத்தணியில் கைது
திருத்தணியில் ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் வெட்ட சென்ற 5 பேரை கைது செய்து காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் விசாரணை;
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி - திருப்பதி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிவேகமாக திருத்தணியில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற சொகுசு காரை மடிக்கி சோதனை செய்ய போலீசார் முயற்சி செய்தபோது அந்த காரில் இருந்த டிரைவர் தப்பி ஓடிவிட்டார். உடனடியாக அந்த காரை மறித்து போலீசார் அதன் காருக்குள் இருந்து 5 நபர்கள் மற்றும் சொகுசு காரை திருத்தணி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் காரில் வந்தவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியைச் சேர்ந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த குமார், குப்புசாமி, கமலநாதன், பிரகாஷ், முருகேசன் என்பதும், இவர்கள் 5 பேரும் ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே செம்மரம் வெட்ட வேண்டும் என்றும், அதற்காக ஒரு நாளைக்கு 1000 ரூபாய் கூலி கொடுப்பதாகவும் புரோக்கர்கள் இவர்களை அழைத்து வந்தது தெரியவந்தது.
மேலும் தப்பி ஓடியவர் செம்மரம் வெட்ட செல்லும் நபர்களின் முக்கிய நபராக இருக்கக்கூடும் என்றும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவர்களிடமிருந்து, 5க்கும் மேற்பட்ட கத்தி, மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருள்கள் சொகுசு காரையும் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.