திருத்தணி அருகே வீட்டு மனை பட்டா வேண்டி மக்கள் நடைப்பயணம்

வயல்வெளியில் பேரணியாக சென்ற போது காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-01-31 04:30 GMT

களாம்பாக்கம் ஊராட்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட கிராமத்தினர். 

திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த களாம்பாக்கம் ஊராட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு வசிக்கும் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு வீட்டுமனை பட்டா வேண்டி கடந்த 2018 முதல் திருத்தணி வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும் அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து இருப்பதையும் கண்டுகொள்ளவில்லை எனவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனையடுத்து முதல்வரை நோக்கி பயணம் மேற்கொள்ளப்போவதாக கிராம மக்கள் அறிவித்து வயல்வெளியில் இறங்கி கிளம்பியதால் காவல்துறையினருக்கும் கிராம மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. களாம்பாக்கம் கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட 100- குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க உத்தரவாதம் வழங்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துவிட்டு கிராமத்தில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கிராமத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்களுக்கு ஆதரவாக மக்கள் தேசம் கட்சி சார்பில் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News