சுடுகாடு பிரச்சனை சம்பந்தமாக வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம்

சுடுகாடு பிரச்சனை சம்பந்தமாக திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்தியா தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது;

Update: 2022-01-25 03:30 GMT

சமாதான கூட்டத்திற்கு வந்திருந்த ஊர் பொதுமக்கள் 

திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை ஒன்றியம் ஜி.சி.எஸ். கண்டிகை ஊராட்சி மேட்டுக்காலனி பகுதியில் நிலவிவந்த சுடுகாடு பிரச்சனை சம்பந்தமாக திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்தியா தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

இதில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் பொதுமக்கள் பங்கேற்று சுடுகாடு பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வு காண கோரிக்கை விடுத்தனர். மாநில இளைஞர் அணி தலைவர் மகா, மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் பழனி, மாவட்ட தலைவர் சதாசிவம்,   ஒன்றிய செயலாளர் ஜே. சுரேஷ் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் என்.சுந்தர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News