இருசக்கர வாகனம் மீது கார் மாேதியதில் ஒருவர் உயிரிழப்பு: 2 பேர் படுகாயம்
திருத்தணி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மாேதியதில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.;
திருத்தணி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மாேதியதில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் அடுத்துள்ள வி.ஜி.கேபுரம் பகுதியை சேர்ந்தவர்.மகன் குமார் (37). கனகம்மாசத்திரம் பகுதியில் வசித்து வருபவர் நாகராஜ் (39). இவர்கள் இருவரும் பூமாலை கட்டும் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கனகம்மாசத்திரம் அருகே திருவாலங்காடு சாலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குமாருடைய மோட்டார் சைக்கிளில் குமார், நாகராஜ், ஆகியோரின் உறவினர் மகன் விக்னேஷ் (4) மூவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பின்னர் வீடு திரும்பிக் காெண்டிருந்தனர்.
அப்போது கனகம்மாசத்திரம் சந்திப்பு சாலையில் வந்தபோது திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் நாகராஜ் பலத்த காயமடைந்தார். குமாருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. சிறுவன் விக்னேஷ், லேசான காயத்துடன் தப்பித்தார் இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் குமார் மற்றும் நாகராஜன் இதுவரையும் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக. சென்னை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நாகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்.