திருவள்ளூரில் கவனத்தை திசைத் திருப்பி பணம், செல்போன் திருட்டு

திருவள்ளூரில் கீழே பணம் கிடப்பதாக கூறி கவனத்தை திசை திருப்பி 79 ஆயிரம் பணம், செல்போனை பறித்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2021-04-29 18:00 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதி (48). இவர் ஆர்.கே பேட்டையில் உள்ள இந்தியன் வங்கியில் தொடர்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

தினமும் வங்கியிலிருந்து பணம் எடுத்து (ளிகிறி) ஓய்வூதியம் மற்றும் ஊரக வளர்ச்சி மேலாண்மை ஊதியம் ஆகியவற்றை வழங்குவதற்காக தினமும் செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 28.4.2021 அன்று காலை சுமார் 10.45 மணியளவில் கையில் வைத்திருந்த மஞ்சள் பையில் 79,100 ரூபாய் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை வைத்துக்கொண்டு சென்றார். அப்போது ஆர்.கே பேட்டை பொன்னியம்மன் கோவில் தெருவில் சரவணன் என்பவரது வீட்டின் அருகில் நிறுத்தி வைத்திருந்த தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுப்பதற்காக செல்ல முயன்றார்.

அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சாலையில் உங்களது பணம் கீழே விழுந்து இருப்பதாக தெரிவித்து, அவரின் கவனத்தை திசைத் திருப்பினர். வேறுயாருடைய பணத்தை தனது பணம் என்று நினைத்து அதனைக் கைப்பற்ற சென்றார்அவர்.

இந்த நிலையில் தான் கையில் வைத்திருந்த பணப்பையை வண்டி மீது வைத்து விட்டு அந்த பணத்தை எடுக்க சென்றார், அந்த சமயத்தில் உடன் வந்த மற்றொரு இளைஞர் அந்த பையை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தயாராக இருந்த அந்த இளைஞரின் இருசக்கர வாகனத்தில் ஏறி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

பிறர் பணத்துக்கு ஆசைப்பட்டு, தனது பணம் செல்போனை பறி கொத்த பாரதி ஆர்கே பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News