அய்யனேரி ஊராட்சியில் தார் சாலை விரிவாக்க பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ
ஆர்கே பேட்டை அடுத்த அய்யனேரி ஊராட்சியில் புதிய தார் சாலை விரிவாக்க பணிகளை திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் தொடங்கி வைத்தார்.;
ஆர் கே பேட்டை அய்யனேரி கிராமத்தில் புதிய தார் சாலை விரிவாக்கும் பணியை திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் தொடங்கி வைத்தார்.
ஆர் கே பேட்டை அய்யனேரி கிராமத்தில் ரூ .1 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை விரிவாக்கும் பணியை திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆர்கே பேட்டை அடுத்த அய்யனேரி ஊராட்சியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 1 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் சாலை விரிவாக்கு பணியை திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் தொடங்கி வைத்தார் .
மொத்தம் 1 புள்ளி 80 மீட்டர் அளவில் இந்த புதிய தார் சாலை விரிவாக்கு பணிக்கு பூமி பூஜை நடத்தி ஜேசிபி இயந்திரத்தின் மூலம் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளிப்பட்டு நெடுஞ்சாலைத்துறை ஏடி. ரமேஷ் குமார் ஆர்கே பேட்டை ஒன்றிய குழு தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன், திலகவதி ரமேஷ், ஒன்றிய செயலாளகள் சண்முகம், பழனி, மற்றும் கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற தலைவர், திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.