பீரகுப்பம் ஊராட்சியில் அரசு ஆரம்பப் பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சந்திரன்
பீரகுப்பம் ஊராட்சியில் அரசு ஆரம்பப் பள்ளிகளை சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.;
கொரோனா ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளில் உள்ள அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றார் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பீரகுப்பம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.