கல்லூரிக்கு சென்ற 17வயது மகள் காணவில்லை: தாய் புகார்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற 17 வயது மகள் மாயமானதாக தாய் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.;
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற 17 வயது மகள் காணமல் போனதாக தாய் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தம்மாள் வயது (56). இவரது மகள் மோனிஷா வயது (17). இவர் ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எஸ். கல்லூரியில் பி.எஸ்.சி முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இவர் தினமும் கல்லூரி முடித்துவிட்டு மாலை 6 மணியளவில் வீட்டிற்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த 4.4.21 அன்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றவர், மீண்டும் இரவு வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த தாய் கோவிந்தம்மாள் அக்கம்பக்கத்தினர் நண்பர்கள் தோழிகள் உறவினர்கள் வீடுகளில் விசாரித்து பார்த்துள்ளார். எங்கும் வராததால் அதிர்ச்சி அடைந்த கோவிந்தம்மாள் பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் மகள் கல்லூரிக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பவில்லை என்றும் அவரை கண்டுபிடித்து தருமாறு கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.