திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு
Temple News- திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார்.
Temple News- திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா வருகிற 21.07.2022 முதல் 25.07.2022 வரை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழாவின் முன்னேற்பாடு பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா நடைபெறவுள்ள 21.07.2022 முதல் 25.07.2022 வரையிலான 5 நாட்களில் 24 மணி நேரமும் அறுசுவை உணவு பக்தர்களுக்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வழங்கப்படும். திருத்தணியில் அமைந்திருக்கின்ற இந்த திருக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு தெப்ப திருவிழா, பக்தர்கள் நேர்த்தி கடன் செய்கின்ற காவடிகள், தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் இலட்ச கணக்கில் மக்கள் கூடுகின்ற இந்த ஆடிகிருத்திகை தெப்ப திருவிழாவிற்கு வருகின்ற பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், போக்குவரத்து வசதிகள், அதேபோல் மணிகணக்கில் மக்கள் தரிசனத்திற்காக காத்துக்கிடக்கின்ற நேரத்தை தவிர்ப்பது குறித்தும், வருகின்ற பக்தர்களுக்கு போதுமான அளவு இயற்கை உபாதைகளை போக்கிக்கொள்வதற்கு கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள், சுகாதார வசதிகளை பேணிக்காப்பதற்காக குப்பைகளை தொடர்ந்து அகற்றுதல், திருத்தணி திருக்கோயில் மட்டுமல்லாமல், சுற்றியிருக்கின்ற பகுதிகளில் முன்படி, அதேபோல் பின்னால் அமைந்திருக்கின்ற திருக்குளத்தைச் சேர்ந்த படிக்கட்டுகள், போக்குவரத்து வசதிக்காக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்ற இடங்கள், முழுவதுமாக வெளிச்சத்திற்காக அதிகப்படியான ஒளி தருகின்ற விளக்குகளை அமைப்பது இதுபோன்ற பல்வேறு சாத்தியக்கூறுகளை துறையின் சார்பில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர தேதவையான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து, ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு மாவட்ட நிர்வாகத்தோடு காவல் துறையும், இந்து சமய அறநிலையத்தோடு ஒருங்கிணைந்து பக்தர்களுக்கு முழு அளவில் அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி தருவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதுபோன்ற திருவிழாக்கள் நடைபெறுகின்ற திருக்கோயில்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து, இதுபோன்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டதற்கிணங்க, இன்றைக்கு திருத்தணியிலே தணிகை முருகன் திருத்தலத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டோம்.
அதோடு நீண்ட காலமாக நிலுவையில் இருக்கின்ற இராஜ கோபுரத்தை இணைக்கின்ற படிக்கட்டுகள் கட்டப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் பணியின் முன்னேற்றத்தை குறித்தும் கலந்தாய்வு செய்திருக்கின்றோம். திருக்கோயிலுக்கு சொந்தமான வெள்ளித்திருத்தேர் புதிதாக அமைக்கப்படுகின்ற அந்த திருத்தேர் பணிகளையும் தற்போது கலந்தாய்வு செய்திருக்கின்றோம். திருத்தணிக்கு மாற்றுப்பாதை வேண்டுமென்ற நீண்ட நாள் கோரிக்கையை நம் மாவட்ட நிர்வாகத்தோடு மாவட்ட ஆட்சியர் அவர்கள் முழுமையாக அதற்கு முழு முயற்சி எடுத்துக்கொண்டு மாற்றுப்பாதைக்குண்டான பணியின் முன்னேற்றம் குறித்தும் கலந்தாய்வு செய்யப்பட்டது. அந்த வகையில், தொடர் நடவடிக்கையாக, தொடர் முயற்சியாக இந்த பணிகள் அனைத்தும் வேகப்படுத்தப்படுவதை கண்டு மகிழ்ச்சியடைகிறோம். திருத்தணி தணிகை முருகனுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும், பக்தர்கள் வருகை தந்து சிறப்போடு இறை தரிசனம் செய்து செல்வதற்கான கட்டமைப்பு வசதிகள் வெகு விரைவில் ஏற்படுத்தி தரப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவி;த்துக்கொள்கிறோம்.
இந்த நிகழ்வு என்பது 21.07.2022 முதல் 25.07.2022 ஆகிய ஐந்து நாட்கள் நடைபெறவிருக்கின்றன. தினந்தோறும் இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தரிசனத்திற்காக வந்து செல்வதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். அதிக அளவு பக்தர்கள் வருகின்ற சூழ்நிலையில் அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும், சுழற்சி முறையில் செய்து தருவதென்று முடிவெடுத்திருக்கின்றோம். ஆகவே, இந்த மாதம் தெப்ப திருவிழா என்பது முழுமையாக பக்தர்களுக்கு பெருமளவில் சிரமத்தை குறைக்கின்ற அளவில் ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த ஐந்து நாட்களும் முழுவதுமாக சுவாமி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே, பக்தகோடிகளுக்கு அன்போடு தெரிவித்துக்கொள்வது அந்த குறிப்பிட்ட நேரத்தில் வருகை தந்து தான் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது கிடையாது. முழு நேரமும் இரவு, பகல் இரண்டு வேளையும் சுவாமி தரிசனத்திற்கு எப்பொழுதும் போல் இந்த ஆண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, அறநிலையத்துறை கூடுதல் இயக்குநர் திருமகள், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மு.மீனாட்சி, திருத்தணி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத், இந்து சமய அறநிலையத்துறை (வேலூர்) இணை ஆணையர் சி.லட்சுமணன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஜே.அஸ்வத் பேகம், திருத்தணி நகராட்சி ஆணையர் ராமஜெயம், துணை ஆணையர் செயல் அலுவலர் பா.விஜயா, நகர செயலாளர் வி.வினோத்குமார், நகர்மன்றத் துணைத் தலைவர் சாமிராஜ், ஒன்றிய செயலாளர்கள் ஆர்த்தி ரவி, என்.கிருஷ்ணன், சி.ஜெ.சீனிவாசன், ஜி.ரவீந்திரா, எஸ்.மகாலிங்கம், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் மு.நாகன், சரஸ்வதி சந்திரசேகர், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2