திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவையை அமைச்சர் நாசர் தொடங்கி வைப்பு
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவையை பால் வளத்துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.;
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை திருவாலங்காட்டில் இயங்கி வருகிறது. திருத்தணி, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் ஆலைக்கு கரும்பு அனுப்பிவைக்க பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் நடைபெற்ற நடப்பு ஆண்டுக்கான கரும்பு அரவை துவக்கவிழாவில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் பங்கேற்று தொடங்கி வைத்தார். இப்பருவத்திற்கு 2052 கரும்பு விவசாயிகள் 8052 ஏக்கரில் சாகுபடி செய்த கரும்பு பயிர் தற்போது 5876 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு மூலம் 1.75 லட்சம் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு 1.34 லட்சம் டன்கள் அரைக்கப்பட்டது. இந்த ஆண்டு 1.75 லட்சம் டன்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் மலர்விழி ஆலய நிர்வாக குழு தலைவர், இயக்குனர்கள், மற்றும் கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.