திருத்தணியில் திமுக அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் நாசர்

திருத்தணியில் இன்று திமுக அலுவலகத்தை பால்வளத் துறை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்.;

Update: 2021-09-05 12:47 GMT

திருத்தணி திமுக அலுவலகத்தை அமைச்சர் நாசர், எம்பி ஜெகத்ரட்சகன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.


திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி ஒன்றிய திமுக அலுவலக திறப்பு விழா இன்று காலை 9 மணியளவில் திருத்தணி பைபாஸ் சாலையில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி திருத்தணி திமுக அலுவலகத்தைத் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திருத்தணி எஸ். சந்திரன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம். பூபதி, திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி மன்ற பெருந்தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News