ஆந்திராவிலிருந்து மலிவு விலை மது பாட்டில்கள் கடத்தியவர் கைது

ஆந்திராவிலிருந்து மலிவு விலை மதுப்பாட்டில்கள் கடத்திச் சென்றவரை ஆர்.கே.பேட்டை போலீசார் கைது செய்தனர்;

Update: 2022-09-18 03:00 GMT

ஆந்திராவிலிருந்து மதுபாட்டிகளைக்கடத்தி வந்தபோது கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன்(55) 

ஆந்திராவிலிருந்து மலிவு விலை மதுப்பாட்டில்கள் கடத்திச் சென்றவரை ஆர்.கே.பேட்டை போலீசார் கைது செய்து 106 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

ஆந்திராவில் மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மலிவு விலை மது பாட்டிகள் மொத்தமாக வாங்கி தமிழக கிராமங்களில் விற்பனை நடைபெற்று வருவதாக திருத்தணி துணை கண்காணிப்பாளர் விக்ணேசுக்கு  தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆர்.கே.பேட்டை காவல் ஆய்வாளர் ராஜ் தலைமையில் போலீசார் ஆந்திர எல்லைப் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நேற்று சோளிங்கர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த நபரை நிறுத்தி வாகனம் சோதனையிட்டதில் ஆந்திர மாநில மலிவு விலை மது பாட்டிகள் கடத்திச் சென்றது தெரியவந்தது.இதனை அடுத்து 106 மது பாட்டிகள் பறிமுதல் செய்த போலீசார் ராணிப்பேட்டை மாவட்டம் மரம்பாதி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்(55) கைது செய்யப்பட்டார்.



Tags:    

Similar News