திருத்தணி அருகே தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது!

திருத்தணி அருகே தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது; டிராக்டர் மற்றும் மினி வேன் பறிமுதல் - திருவள்ளூர் மாவட்ட சிறப்பு காவல் பிரிவு அதிரடி.

Update: 2021-08-25 14:21 GMT

திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முத்துக் கொண்டாபுரம் கொசஸ்தலை ஆற்றில் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வந்தது. ஆனால் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சிறப்பு காவல் பிரிவினர் நேற்று இரவு கொசஸ்தலை ஆற்றில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்பொழுது மணல் கடத்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த முத்துக் கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்தனர். அதேபோல மணல் கடத்தலுக்கு பயன்படுத்த வைக்கப்பட்டிருந்த மினி வேனையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர். கனகம்மாசத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முத்துக் கொண்டாபுரம் கொசஸ்தலை ஆற்றில் தொடர் மணல் கொள்ளையை காவல்துறையினர் கண்டுகொள்ளாததால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு தொடர மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News