திருத்தணி எம்.எல்.ஏவுக்கு வழக்கறிஞர் அணியினர் வாழ்த்து!
திருத்தணி திமுக எம்எல்ஏ சந்திரனுக்கு வழக்கறிஞர் அணி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள திமுக அலுவலகத்தில் திருத்தணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ். சந்திரன் எம்.எல்.ஏவுக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பு சார்பாக மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வி. கிஷோர் ரெட்டி தலைமையில் வழக்கறிஞர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.