திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி லட்சார்ச்சனை

திருத்தணி முருகன் கோவில் கந்த சஷ்டி விழா முதல் நாளை முன்னிட்டு லட்சார்ச்சனை நடைபெற்றது.;

Update: 2023-11-14 09:36 GMT

திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா முதல் நாளான இன்று லட்சார்ச்சனையுடன் கோலாகலமாக தொடங்கியது. முக்கிய விழாவான புஷ்பாஞ்சலி வருகிற  18 ம்தேதி நடைபெற உள்ளது.


முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழா முதல் நாளான இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. அதிகாலை மூலவருக்கு பால்,தயிர், சந்தனம்,ஜவ்வாது,திருநீர், தேன், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு   பூஜைகள் செய்யப்பட்டு பட்டுப்புடைகளாலும், வண்ண மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அப்போது முருகப்பெருமான் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். காலை 9 மணிக்கு சண்முகருக்கு வீல்வ இலைகளால் லட்சார்ச்சனை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் தொடர்ந்து விழா நடைபெற உள்ள 6 நாட்கள் லட்சார்ச்சனை பூஜைகள் நடைபெற உள்ளது.


விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புஷ்பாஞ்சலி வரும் 18 தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவில் இறுதி நாளான 19 தேதி முருகன் திருக்கல்யாண உற்சவருக்கு திருமணம் நடைபெறும். கந்தசஷ்டியை முன்னிட்டு திருக்கோயில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் முருகன் மாலை அணிவித்து விரதமிருந்து கந்தசஷ்டி கவசம் பூஜைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கந்த சஷ்டி விழாவில் பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்பதால் கோவிலில் அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. மேலும் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News