திருத்தணி அருகே ரூ.2லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் திருட்டு :2 பேர் கைது
House Theft 2 Persons Arrested அத்திமாஞ்சேரி பேட்டை ஊராட்சியில் பெண்ணின் வீட்டில் 2- லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் திருடியவர்கள் மீது இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு நடவடிக்கை எடுத்து கைது செய்த போலீசார்.;
House Theft 2 Persons Arrested
திருத்தணி அருகே அத்திமாஞ்சேரி பேட்டை ஊராட்சியில் தொழிலதிபர் ஒருவரின் பண்ணை வீட்டில் வீட்டு உபயோக பொருட்கள் திருடிய வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
House Theft 2 Persons Arrested
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு வட்டம் அத்திமாஞ்சேரி பேட்டை ஊராட்சியில் தொழிலதிபர் ஒருவரின் பண்ணை வீடு உள்ளது.இந்த வீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் இருந்த மின் மோட்டார்கள், டி.வி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மேலும் பல்வேறு பொருட்கள் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிற்குரிய பொருட்கள் அவ்வப்போது ஒவ்வொன்றாக திருடப்பட்டு உள்ளது.இந்த வீட்டில் உரிமையாளர் மகாலட்சுமி அவரது கணவர் ஷங்கர் ஆகியோர் சென்னையில் வசித்து வருகின்றனர்.
பண்ணை வீடு என்பதால் அவ்வப்போது இங்கு வருவார்கள் வீட்டில் இவர்கள் இல்லாத சமயத்தில் திருடர்கள் இந்த வீட்டில் இருந்து மேற்கண்ட பொருட்களை திருடி உள்ளனர்.இதனால் வீட்டின் உரிமையாளர் மகாலட்சுமி பொதட்டூர் பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார்.மேலும் இந்த வழக்கினைப் பதிவு செய்து போலீசார் மிகவும் காலதாமதமாக விசாரணையை தொடங்கி இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்த திருட்டு வழக்கில் இதில் தொடர்புடைய அத்திமாஞ்சேரி பேட்டை காலணியில் வசிக்கும் மோகன் மற்றும் முரளி ஆகிய இரண்டு நபர்களை போலீசார் கைது செய்து பள்ளிப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.பின்னர் இரண்டு திருட்டு வழக்கு குற்றவாளிகளையும் சிறையில் அடைத்தனர் போலீசார். நீண்ட நாட்களுக்கு பிறகு திருட்டு வழக்கில் இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.