சோதனை சாவடி எல்லையில் உள்துறை செயலாளர் ஆய்வு

திருத்தணி அருகே தமிழக-ஆந்திரா சோதனை சாவடி எல்லையில் உள்துறை செயலாளர் அமுதா ஆய்வு செய்தார்.

Update: 2024-05-25 14:15 GMT

சோதனை சாவடியில் தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

திருத்தணி அருகே தமிழ்நாடு - ஆந்திரா எல்லை சோதனை சாவடி சாவடியில் கண்காணிப்புகளை மேம்படுத்த வேண்டும் என தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஆய்வு மேற்கொண்டபின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பள்ளிப்பட்டு அருகே தமிழக - ஆந்திரா எல்லைப்பகுதியில் தமிழக போலீஸ் சோதனை சாவடி இயங்கி வருகிறது. இந்த சோதனை சாவடியில் தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். திடீரென ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின் போது இந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்படுகிறதா, இரவு மற்றும் பகல் நேரங்களில் ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களை சரியான முறையில் சோதனையில் ஈடுபடுகிறார்களா எனவும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்களா.. இந்த பகுதியில் மணல் கடத்தல், குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கடத்தல் இந்த பகுதியில் தடுக்கப்பட்டுள்ளதா எத்தனை வழக்குகள் போடப்பட்டுள்ளது காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் உள்துறை செயலாளர் கேள்விகளை எழுப்பினார்.

இதனை அடுத்து அவர் இந்த பகுதியில் சிறப்பான முறையில் கண்காணிப்புகளை மேம்படுத்த வேண்டும் தற்போது உள்ள கண்காணிப்பு போதுமான வகையில் இல்லை போலீஸ் சோதனை சாவடி என்ற பெயரில் ஒரு குடோன் போல் உள்ளது. இதனை மேம்படுத்த வேண்டும் கண்காணிப்பு கேமரா சரியான முறையில் இயக்க வேண்டும் என்று பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் சென்றுள்ளார்.

Similar News