அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச முடிதிருத்தம்: பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏற்பாடு

கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளிமாணவர்கள் சிகை அலங்காரம் ஒழுங்குப்படுத்தும் வகையில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரமேஷ் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினார்.;

Update: 2022-09-09 02:15 GMT

மாணவர்களிடம் முடித்திருத்தம் செய்ய அறிவுறுத்தும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்.

திரைப்பட நடிகர்களை பின்பற்றி அரசுப் பள்ளி மாணவர்களின் ஹேர் ஸ்டைல் ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கு முகம் சுளிக்க வைக்கின்றது. மாணவர்கள் சிகை அலங்காரம் தொடர்பாக கல்வித் துறை சார்பில் பல்வேறு உத்தரவுகள் போட்டாலும் ஸ்டைல் என்ற பெயரில் மாணவர்கள் என்று மறந்து முடிக்கு ஓரத்தில் கோடு போடுவது, அதிக அளவில் முடி விடுவது, முடிக்கு வர்ணம் பூசிக்கொள்வது போன்ற பல்வேறு ஸ்டைலில் மாணவர்கள் முடி வெட்டிக்கொள்கிறனர்.

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முடி திருத்தம், ஒழுக்கம் கடைபிடிப்பது குறித்து பல்வேறு முயற்சிகள் செய்து வரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளிமாணவர்கள் சிகை அலங்காரம் ஒழுங்குப்படுத்தும் வகையில், அப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரமேஷ் மாணவர்களுக்கு தனித் தனியாக பேசி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி கடந்த மூன்று நாட்களில் 100க்கும் மேற்ப்பட்ட மாணவர்களுக்கு சலூன் கடைக்கு அழைத்துச் சென்று இலவசமாக முடிதிருத்தம் செய்து வருகிறார்.

இதனால் மாணவர்கள் ஏராளமானோர் முன் வந்து, ஒழுங்காக சிகை அலங்காரம் செய்துக் கொண்டு பள்ளி வருகின்றனர். மாணவர்கள் மீது பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரின் அக்கறை ஆசிரியர்கள் மட்டுமின்றி மாணவர்களின் பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News