முதலமைச்சரின் இலங்கை பொது நிவாரண நிதிக்கு பள்ளி மாணவிகள் நிதி உதவி

முதலமைச்சரின் இலங்கை பொது நிவாரண நிதிக்கு பள்ளி மாணவிகள் நிதி உதவி அளித்துள்ளனர்.;

Update: 2022-05-11 03:50 GMT

இலங்கையில் தற்போது நிலவிவரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் வாங்குவதற்கு பொதுமக்கள் தங்களால் முயன்ற உதவியை தாராளமாக வழங்கலாம் என்று நமது தமிழக முதல்வர் மு .க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பெயரில் திருத்தணி அடுத்த விநாயகபுரம் வி. வெற்றியழகன் மகள் வி. லேகா ஸ்ரீ தன்னுடைய சிறு சேமிப்பில் இருந்து ரூ. 1567 ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.

அதேபோல் திருத்தணி அடுத்த தாழவேடு கிராமத்தைச் சேர்ந்த . கிருஷ்ணமூர்த்தி மகள் கே.பி.ஹெர்ஷினி தன்னுடைய சிறு சேமிப்பிலிருந்து ரூ1543 ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். மொத்தம் ரூ. 3110 இதேபோல்( இந்த 2 மாணவிகள் கடந்த ஆண்டுகளாக கொரோனோ நிவாரண நீதியை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்)

அதே போல் இந்த முறை இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இந்த இரண்டு மாணவிகளும் இலங்கை பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டு பிரச்சனை என்று பார்க்காமல் மனிதாபிமான அடிப்படையில் குழந்தைகள் தற்போது நிவாரண நிதி முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். இவர்கள் ஏற்கனவே இரண்டு முறையை தொடர்ந்து மூன்றாவது முறையாக வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News