திருத்தணி கிளைச் சிறையை மாவட்ட நீதிபதிகள் நேரில் ஆய்வு
திருத்தணி தாலுகா அலுவலகம் அருகே உள்ள கிளைச் சிறையை மாவட்ட நீதிபதிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.
திருத்தணியில் உள்ள கிளைச் சிலையை நீதிபதிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று சிறையை ஆய்வு செய்தார்.
திருத்தணி பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் கிளை சிறை இயங்கி வருகிறது. இங்கு, 35.கைதிகள் வரை தங்கும் வசதி உள்ளது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியுட் புஷ்பா, திருவள்ளூர் மாவட்ட குற்றவியல் நீதிபதி மோகன், மோட்டார் வாகன விபத்து பிரிவு நீதிபதி சரஸ்வதி மற்றும் நீதிபதி தீனதயாளன், மாவட்ட ஆட்சி தலைவர் பிரபுசங்கர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீவாசா பெருமாள் ஆகியோர், திருத்தணி கிளை சிறைக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
பின், நீதிபதி ஜூலியுட்புஷ்பா கூறுகையில்,‛ உச்சநீதிமன்றம், தமிழகத்தில் உள்ள கிளைச்சிறைகளில் பாதுகாப்பு, சுத்தம், சுகாதாரம், உள்கட்டமைப்பு வசதிகள், கட்டடம் பராமரிப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் கைதிகள் என்ன குற்றம் செய்து சிறைக்கு வந்தனர் என கேட்டு அறிந்து மேற்கண்ட வசதிகள் குறித்து அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டது.இதற்காக மாவட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் போன்ற சிறப்பு குழு அமைத்து, கிளைச் சிறையில் ஆய்வு நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் திருத்தணி கிளைச் சிறையில் குறைகள் குறித்து கண்டறிந்தோம். மேலும் கைதிகள் சில புகார் தெரிவித்தனர். இதை அறிக்கையாக தயாரித்து உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பி வைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது சென்னை புழல் சிறையின் கண்காளிப்பாளர், திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ்தமிழ்மாறன், இன்ஸ்பெக்டர் மதியரசன், திருத்தணி தாசில்தார் மதியழகன், நகராட்சி ஆணையர் அருள், பொறியாளர் விஜயகாமராஜ், பொதுப்பணி மேற்பார்வையாளர் நாகராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.