திருத்தணியில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு
திருத்தணியில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது கொலையா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.;
திருத்தணியில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ராணிப்பேட்டை, வேலூர், செல்லும் நெடுஞ்சாலையில் தாடூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ரோஸி நாயுடு என்பவரது விவசாய நிலப்பகுதியில் வேர்க்கடலை பயிர் செய்து இருக்கும் இடத்தில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் இருப்பதாக பொதுமக்கள் திருத்தணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்,
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர், இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது, அந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம் 26 -வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஆகும் இவர் பெயர் சங்கர் வயது-26 இந்த நபர் அருகிலுள்ள கேஜி கண்டிகை பகுதியில் இவரது உறவினர் முரளி என்பவரது வீட்டில் தங்கி சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இவர் எரிந்து பிணமாக இருந்த இடத்தில், சடலத்தின் அருகில் மூன்று பெட்ரோல் கேன்கள் உள்ளது இதன் மூலம் உடலில் ஊற்றி கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது முன்விரோதம் காரணமாக பெட்ரோல் ஊற்றி கொலை செய்தார்களா என்ற பல்வேறு கோணங்களில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்,
மேலும் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா மூலமும் துப்பு தொடங்கி உள்ளோம், பிரேதத்தின் அருகில் ஒரு செல்போன் உள்ளது அது இறந்துபோன வாலிபரின் செல்போன அல்லது யாருடைய செல்போன் என்றும் போன்ற பல்வேறு கோணங்களில் தற்போது விசாரணை மேற்கொண்டு உள்ளோம் என்று போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்
அதிக மக்கள் நடமாட்டம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பகுதியில் பட்டப்பகலில் ஆண் ஒருவரை கொலை செய்தார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.